Home நாடு பினாங்கு சுரங்கப்பாதை ஊழல்: ‘டத்தோ’ கைது!

பினாங்கு சுரங்கப்பாதை ஊழல்: ‘டத்தோ’ கைது!

824
0
SHARE
Ad

MACCஜார்ஜ் டவுன் – பினாங்கில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில், ‘டத்தோ’ ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

50 வயதான அந்த ‘டத்தோ’-வை வரும் ஜனவரி 15-ம் தேதி வரை 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய துணைப் பதிவாளர் முகமது அசாம் முகமது யூசோப், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, பினாங்கில் இது தொடர்பாக 4 அரசு அலுவலகங்கள், 3 தனியார் அலுவலகங்களில் நடந்த ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிரடிச் சோதனையில் மூத்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice