Home கலை உலகம் நட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்!

நட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்!

1124
0
SHARE
Ad

Vishalகோலாலம்பூர் – தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்ற மாபெரும் நட்சத்திர விழா 2018, கடந்த சனிக்கிழமை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

மலேசியாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்று, சுமார் 12 மணி நேரங்கள் தொடர்ந்து நடந்த கலை விழா என்பதன் அடிப்படையில், மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இதில் மை ஈவண்ட்ஸ் தலைமைச் செயலதிகாரி ஷாகுல், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால், நடிகர் நந்தா, நடிகர் ரமணா, காசிம் அமைப்பின் தலைவர் விஜய் எமர்ஜென்சி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சரத்குமார், ராதிகா, நயன்தாரா, ஓவியா என பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காதது குறித்து நடிகர் விஷாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நடிகர் விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்துக் கலைஞர்களுக்கும் முறைப்படி நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், சிலர் தவிர்க்க முடியாத படப்பிடிப்புகள் காரணமாக பங்கேற்க இயலவில்லை எனத் தெரிவித்தனர். தனுஷுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பங்கேற்கவில்லை. அதே போல் ஓவியா, பரணி ஆகிய இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால், ஒப்பந்தப்படி, அவர்களால் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.

சிலர் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறிய குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்த விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் நிச்சயம் அழைப்பு சென்றிருக்கும். ஒருவேளை குற்றம் சாட்டுபவர்கள் உறுப்பினராக இல்லை என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு, நடிகை ராதிகா, நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் படி தங்களுக்கு அழைப்பு வரவில்லை என தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஃபீனிக்ஸ்தாசன்