சுரங்கப் பாதைத் திட்டத்தில் பல்வேறு ஊழல் நடந்திருப்பதாக பார்ட்டி சினா மலேசியா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஹுவான் செங் குவான் புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
பினாங்கு பொதுப்பணித்துறை, பினாங்கு மாநிலச் செயலகம், பினாங்கு நிலம் மற்றும் நிலக்கரி அலுவலகம், பினாங்கு மதிப்பீட்டு அலுவலகம் மற்றும் பினாங்கு நிதிச் சேவை அலுவலகம் ஆகியவற்றோடு, சொத்து மேம்பாடு தொடர்பான இன்னும் 3 நிறுவனங்களில் இச்சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.
Comments