Home இந்தியா உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு

1206
0
SHARE
Ad

chennai-high-courtபுதுடெல்லி – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, இன்று வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுப்பூர்வமான பதிலளித்திருக்கும் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் சவுத்ரி, “தமிழக அரசின் இந்தப் பரிந்துரையை ஏற்கமுடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 11-10-2012 அன்று அறிவித்திருக்கிறது.”

#TamilSchoolmychoice

“இதற்கு முன்பு, கடந்த 1997, 1999-ம் ஆண்டுகளில் இதே போன்ற கோரிக்கை வைக்கப்பட்ட போதும், அதனை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.