ஜார்ஜ் டவுன் – பினாங்கில் 5 பேர் மயக்கமடைவதற்குக் காரணமான ‘துரியன் காபியில்’ போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது.
ஜார்ஜ் டவுன் ஓசிபிடி துணை ஆணையர் அனுவார் ஓமார் கூறுகையில், “அந்த காபி பொடி மாநில உணவுப் பாதுகாப்பு இலாகாவிற்கும், பரிசோதனைக்காகவும் அனுப்பப்பட்டது. அதன் முடிவில் அந்த காபி பொடியில் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த புதன்கிழமை, சக பாதுகாவலர்களால் இலவசமாக வழங்கப்பட்ட துரியன் காபியைக் குடித்த இரு நேபாள பாதுகாவலர்கள் உட்பட 5 பேர் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.