Home நாடு ஜூலை மாதத்திற்கு முன்பு பொதுத்தேர்தலா? – நஜிப் கோடிட்டுக் காட்டினார்!

ஜூலை மாதத்திற்கு முன்பு பொதுத்தேர்தலா? – நஜிப் கோடிட்டுக் காட்டினார்!

1478
0
SHARE
Ad

najib-waving-photo-featureபுத்ராஜெயா – ஜூலை மாதம் ஹஜ் நேரத்திற்கு முன்பாக 14-வது பொதுத்தேர்தல் வரலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோடிட்டுக் காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

வரும் ஜூலை 14-ம் தேதி, ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் சுமார் 1,200 இமாம்களும், கிராமத் தலைவர்களும், சமுதாயத் தலைவர்களும் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நஜிப், அவர்கள் இரண்டு ‘ராயா’ பெருநாட்களைக் கொண்டாடிய பிறகு தான் செல்வார்கள் எனக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நீங்கள் இங்கிருந்து கிளம்பும் நேரத்தில், ஹரி ராயாவும் முடிந்திருக்கும், மற்றொரு ராயாவும் முடிந்திருக்கும்” என்பதை நஜிப் சூட்சமமாகத் தெரிவித்தார்.

மலாய் மொழியில் பொதுத்தேர்தலுக்கு பிலிஹான்ராயா என்பதை தான் நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார் என ஊடகங்கள் கூறுகின்றன.

“ஆனால், நாம் இந்த விழாவை முன்பே மேற்கொள்கிறோம். கடவுள் விருப்பம், ஒருவேளை அரசாங்கத்தில் மாற்றம் இல்லை என்றால், எல்லாம் நமது திட்டப்படி செல்லும்” என்று 1எம்டிபி மூலமாக ஹஜ் மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை நஜிப் வழங்கினார்.

கடந்த வாரம், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நஜிப், பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஒரு உத்வேகம் வருவதற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.