Home உலகம் “என்னை சுட்டுக் கொல்லுங்கள்” – அதிகாரியிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் வேண்டுகோள்!

“என்னை சுட்டுக் கொல்லுங்கள்” – அதிகாரியிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் வேண்டுகோள்!

1313
0
SHARE
Ad

Rodrigo Duterte-President Philippinesமணிலா – தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் தண்டனை வழங்கும்படியும், மாறாக சிறையில் அடைக்கவேண்டாம் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

பிலிப்பைன்சில் போதைப்பொருளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் பிரஜைகளை கொன்றதாக டூடெர்டே மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

அவ்விசாரணையில், தான் போதைப்பித்தர்களைக் கொல்வதற்கு காவல்துறைக்கு உத்தரவிடவில்லை என்று டூடெர்டே விசாரணை அதிகாரி ஃபாத்தாவ் பென்சோடாவிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டூடெர்டே, தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுமாறு விசாரணை அதிகாரியிடம் கேட்டதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நான் உங்களை வரவேற்கிறேன். என் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டால், எந்த நாட்டில் துப்பாக்கியால் சுட்டு தண்டனை கொடுப்பார்களோ அங்கு அனுப்புங்கள். நான் அதற்குத் தயார். மாறாக வழக்கு வழக்கு என இழுத்தடித்து சிறையில் தள்ளாதீர்கள்” என்று பென்சோவிடம் தான் கூறியதாக டூடெர்டே தெரிவித்தார்.