Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘கலகலப்பு -2’ – வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம்!

திரைவிமர்சனம்: ‘கலகலப்பு -2’ – வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம்!

2041
0
SHARE
Ad

Kalakalappu-2 (1)கோலாலம்பூர் – சுந்தர் சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு, சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்ற படம் ‘கலகலப்பு’.

அதன் வெற்றியை அடிப்படையாக வைத்து கலகலப்பு இரண்டாம் பாகத்தை ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோரை வைத்து இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

இரண்டாம் பாகத்தின் கதை, முதல் பாகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றாலும் கூட, முதல் பாகத்தில் ரசிகர்கள் எதையெல்லாம் ரசித்துக் கொண்டாடினார்களோ அவற்றை இக்கதை நடக்கும் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தி மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்திருக்கிறார் சுந்தர்சி.

#TamilSchoolmychoice

உதாரணமாக, அந்த சேட்டை நாய், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரம், மதுபானக் கூடத்தில் குத்துப்பாட்டு என அடுக்கிக் கொண்டே போகலாம்.

kalakalappuகதைப்படி, கையில் இருந்த காசையெல்லாம் ஒருவன் ஏமாற்றி விட விரக்தியில் இருக்கும் ஜெய், தனது தாத்தாவின் பூர்வீகச் சொத்து காசியில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார்.

அங்கு ஜீவா நடத்தி வரும் மேன்சனில் தங்கி, தனது பூர்வீகச் சொத்தை தேட ஆரம்பிக்கிறார். அப்போது அங்கு தாசில்தாராக இருக்கும் நிக்கி கல்ராணியுடன் காதல் ஏற்படுகிறது.

இதனிடையே, ஜீவாவின் தங்கையைப் பெண் பார்க்க வருகிறார் சதீஸ். அவரது தங்கை கேத்ரின் தெரசா மீது காதல் கொள்கிறார் ஜீவா.

இப்படியிருக்க, ஜீவா நடத்தி வரும் மேன்சன் தான் ஜெய்யின் பூர்வீக சொத்து என்பதும், ஏற்கனவே ஜீவாவின் காசை அபகரித்த சிவா தான், ஜெய்யின் காசையும் அபகரித்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

Kalakalappu-2 (3)சிவாவைக் கண்டுபிடித்து இழந்த காசை மீட்க முயற்சி செய்யும் போது, முன்னாள் அமைச்சர் மதுசூதனின் இரகசியங்கள் அடங்கிய லேப்டாப் ஒன்று அவரது ஆடிட்டர் முனீஸ்காந்த் மூலமாக ஜீவா, ஜெய் கையில் கிடைக்கிறது. அதனால் அவர்களுக்கு அமைச்சர் மூலமாகப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த கலாட்டாவில் இருந்து ஜீவாவும், ஜெய்யும் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதை கலகலப்பாக சிரிக்க சிரிக்கச் சொல்லியிருக்கிறார் சுந்தர்சி.

ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி இந்த நான்கு பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த எந்த எல்லைக்குப் போக முடியுமோ அவ்வளவு தூரம் இறங்கி வந்து நடித்திருக்கிறார்கள்.

நிக்கி கல்ராணி என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென எடை கூடித் தெரிகிறார். ஆனால் கேத்ரின் தெரசா சிக்கென்ற உடல்வாகுடன், பாடல்காட்சிகளில் ரசிகர்களைக் கிறங்கடித்திருக்கிறார்.

Kalakalappu-2 (2)இவர்களோடு காமெடிக்கு சிங்கம்புலி, யோகிபாபு, சிங்கமுத்து, ரோபோ ஷங்கர், தளபதி தினேஸ், சந்தானபாரதி, மனோபாலா, ராதாரவி, விடிவி கணேஸ் என ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது பாணியில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

யு.கே செந்தில்குமார் ஒளிப்பதிவில் காசியின் அழகும், பாடல்களில் இருக்கும் வண்ணமயமும் ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு போகிறது.

ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் கூட, பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப ரசனையைக் கூட்டியிருக்கிறது.

படத்தில் குறையாகத் தெரிவது காட்சிகளின் நீளம். ஒரு சில காமெடி சண்டைக்காட்சிகளில் அந்த நீளமான காட்சிகள் ரசிக்க வைக்கிறது என்றாலும் கூட, இரண்டாம் பாதியில் அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் நீளம் சலிப்பையே ஏற்படுத்துகிறது.

திரைக்கதையைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட மூன்று கோணங்களில் நகர்ந்து இறுதியில் ஒன்றாக இணைகின்றது. அந்த நகர்வில் கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது.

மற்றபடி, வழக்கமாக சுந்தர்சி படத்தில் என்ன எதிர்பார்த்துச் செல்வோமோ அவை எல்லாம் இந்தப்படத்தில் இருக்கின்றது.

Kalakalappu-2 (4)திகட்டத்திகட்ட காமெடி, வண்ணமயமான பாடல்கள் என ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் படம் முடிந்து திரும்பலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

-ஃபீனிக்ஸ்தாசன்