Home உலகம் தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கியது!

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கியது!

2460
0
SHARE
Ad

Winter Olympics-2018-pyeongchangபியாங்சாங் – தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது போல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் நடத்தப்பட்டு வருகின்றது.

இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 25-ம் தேதி வரையில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர், வீராங்கணைகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.