Home நாடு வசந்தபிரியா மரணம்: மலேசியத் தமிழர் குரல் டேவிட்டிடம் போலீஸ் வாக்குமூலம்!

வசந்தபிரியா மரணம்: மலேசியத் தமிழர் குரல் டேவிட்டிடம் போலீஸ் வாக்குமூலம்!

998
0
SHARE
Ad

Vasanthapriyaஜார்ஜ் டவுன் – மாணவி வசந்தபிரியா தற்கொலை விவகாரத்தில், மலேசிய தமிழர் குரல் என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் டேவிட் மார்ஷெலிடம் காவல்துறை விசாரணை நடத்தவிருக்கிறது. இதற்காக டேவிட் மார்ஷலுக்கு காவல்துறை சம்மனும் அனுப்பியிருக்கிறது.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற வசந்தபிரியாவைக் காப்பாற்றிய அவரது பெற்றோர் செபராங் ஜெயா மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், அங்கு வசந்தபிரியா சிகிச்சைப் பெற்று வந்த நேரத்தில், அவர் இறந்துவிட்டதாகப் பரவிய செய்தி குறித்தும், தற்கொலை முயற்சிக்கு முன்னதாக பள்ளியில் ஆசிரியர்களால் வசந்தபிரியா தனியறையில் விசாரணை செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் குறித்தும் டேவிட் மார்ஷலிடம் காவல்துறை விசாரணை செய்யவிருப்பதாக பினாங்கு மாநில குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ சைனோல் சமா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“யாரெல்லாம் அது போன்ற அறிக்கைகளை வெளியிட்டார்களோ அவர்களெல்லாம் அதன் விளைவுகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அதேவேளையில் உண்மையும் எங்களுக்குத் தெரிய வேண்டும். எனவே யாருக்கெல்லாம் உண்மை தெரியுமோ அவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்” என்றும் சைனோல் கூறியிருக்கிறார்.