Home நாடு ஊழியர் சேமநிதி வாரியம்: 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இலாப ஈவு வழங்கப்படுகிறது

ஊழியர் சேமநிதி வாரியம்: 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இலாப ஈவு வழங்கப்படுகிறது

1111
0
SHARE
Ad

EPFபுத்ரா ஜெயா – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்திற்காகவோ, அல்லது நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்திலோ, கடந்த 21 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ச இலாப ஈவு  விழுக்காட்டை ஊழியர் சேமநிதி வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டுக்காக வழங்கவிருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரையில் 6 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே ஊழியர் சேமநிதி வாரியம் இலாப ஈவு விழுக்காட்டை அறிவித்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு 5.7 விழுக்காடாக இருந்தது. இந்த முறை 2017-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு 6.8 விழுக்காடாக இருக்கும் என்றும் இதுவே கடந்த 21 ஆண்டுகளில் ஊழியர் சேமநிதி வாரியம் வழங்கவிருக்கும் மிக அதிகபட்ச வட்டி விழுக்காடு என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.