Home நாடு “கேமரன் மலை வேட்பாளரை பிரதமர் தீர்மானிக்கட்டும்” – கேவியஸ்

“கேமரன் மலை வேட்பாளரை பிரதமர் தீர்மானிக்கட்டும்” – கேவியஸ்

1117
0
SHARE
Ad
கேமரன் மலையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கேவியஸ்

கேமரன்மலை – “வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தீர்மானிக்கட்டும் என்று ஏற்கெனவே பலமுறை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று மைபிபிபியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

“2000ஆம் ஆண்டிலிருந்து கேமரன்மலை மக்களுக்கு உதவிகளையும் சேவைகளையும் புரிந்து வருகிறேன். அவை அனைத்தையும் தேசிய முன்னணியை மட்டுமே சார்ந்திருக்காமல் எனது சொந்த பணத்தில் செய்துள்ளேன். தேசிய முன்னணி மீதான எனது வலுவான நம்பிக்கை, இனம், சமயம், அரசியல் கொள்கை பார்க்காமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இவற்றை செய்துள்ளேன்.
எனக்கு கேமரன்மலை மக்கள் நெருக்கமானவர்கள். காரணம், நான் உள்ளூரைச் சேர்ந்தவன். எனது சேவைகள் பற்றி ஓராங் அஸ்லி எனப்படும் பூர்வகுடி மக்கள் உள்பட கிட்டத்தட்ட 7,500க்கும் மேற்பட்ட மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
என்னைப் பொறுத்த வரையில் இந்தத் தொகுதியை தேசிய முன்னணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும், அங்கு எந்தத் தகுதியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதை பிரதமர் நஜிப்பே தீர்மானிக்கட்டும்” என டான்ஸ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.

கேமரன்மலை விவகாரம் தொடர்பில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டான்ஸ்ரீ கேவியஸ் மேற்கண்டவாறு கூறினார்.