Home இந்தியா கமல்ஹாசனின் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

கமல்ஹாசனின் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

908
0
SHARE
Ad

மதுரை – (மலேசிய நேரம் 9.30 மணி நிலவரம்) மதுரை ஒத்தகடை மைதானத்தில் தனது பிரம்மாண்டமான அரசியல் கட்சி பொதுக் கூட்டத்தை இன்னும் சற்று நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் நடத்தவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வந்தடைந்தார்.

கமல் தனது முதல் அரசியல் பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவிப்பதோடு, கட்சியின் கொடியையும் ஏற்றி வைப்பார். அந்தக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் கெஜ்ரிவாலைச் சந்தித்து கமல் கலந்துரையாடினார். அதன் பின்னர் இருவரும் ஒரே காரில் பொதுக் கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

#TamilSchoolmychoice

இந்தப் பொதுக் கூட்டத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மதுரை வந்தடைந்த கமல்ஹாசன் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றும்போது “நான் இனி சினிமா நட்சத்திரமல்ல. உங்கள் வீட்டு விளக்கு” என்று கூறினார்.