கொழும்பு – இலங்கையில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்திருப்பதால், 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்திய இலங்கை அரசு, ஃபேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களையும் நேற்று புதன்கிழமையோடு நிறுத்தியிருக்கிறது.
கடந்த ஓராண்டாக இரு இனத்தவர்களிடையே மோதல் இருந்து வந்த நிலையில், அது முற்றி தற்போது, இனக்கலவரமாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் வசித்து வரும் முஸ்லிம்கள், மற்ற மதத்தினரை முஸ்லிம்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், பழங்கால புத்த சுவடுகளை அழிக்க முயற்சிகள் செய்வதாகவும் புத்தமதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், புத்த தேசியவாதிகள் சிலர், இலங்கையில் அடைக்கலம் புகுந்திருக்கும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.