Home நாடு எம்எச்370 விமானத்தைத் தேடுவதில் முனைப்போடு இருக்கிறோம் – நஜிப் நம்பிக்கை!

எம்எச்370 விமானத்தைத் தேடுவதில் முனைப்போடு இருக்கிறோம் – நஜிப் நம்பிக்கை!

949
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்370 விமானம் மாயமாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் இந்தியப் பெருங்கடலுக்கடியில் இருப்பதாக நம்பப்படும் எம்எச்370 விமானத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை.

இதுவரை, அவ்விமானத்தின் இறக்கையின் ஒருபகுதி மட்டுமே கரை ஒதுங்கி மீட்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, மொத்த விமானமும், அதில் இருந்த பணியாளர்கள் உட்பட 239 பேரும் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை மர்மமாகவே இருந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிப்பதில் மலேசிய அரசாங்கம் இன்னும் முனைப்போடு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.