Home இந்தியா எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது – ரஜினி கண்டனம்!

எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது – ரஜினி கண்டனம்!

1036
0
SHARE
Ad

சென்னை – பெரியார் சிலை குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து காட்டுமிராண்டித்தனமானது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, எச்.ராஜாவுக்கு எதிராகத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், நாளை தமிழகத்திலும் சாதிவெறியர் பெரியார் சிலை அகற்றப்படும் என எச்.ராஜா இரண்டு நாட்களுக்கு முன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அவரது பதிவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழத் தொடங்கவே, தனது பதிவை உடனடியாக எச்.ராஜா நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.