Home நாடு “பக்காத்தான் பதிவை பரிசீலிக்க முடியாது” – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு

“பக்காத்தான் பதிவை பரிசீலிக்க முடியாது” – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு

1200
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சமர்ப்பிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவை இப்போதைக்கு பரிசீலிக்க முடியாது என நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் சுரயாத்தி இப்ராகிம் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் நான்கு உறுப்பியக் கட்சிகளில் ஒன்றான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா, சங்கப் பதிவிலாகா விடுத்த கடிதத்தில் கேட்டிருக்கும் தகவல்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்வரை பக்காத்தான் கூட்டணியின் பதிவு குறித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுரயாத்தி இப்ராகிம் – சங்கப் பதிவிலாகா தலைமை இயக்குநர்

1966 சங்கங்களின் சட்டங்களின்படி பெர்சாத்து கட்சிக்கு கடந்த மார்ச் 9-ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பிய சங்கப் பதிவிலாகா, சில தகவல்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. அவை இன்னும் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், பக்காத்தான் கூட்டணியின் பதிவையும் பரிசீலிக்க முடியாது என தற்போது சங்கப் பதிவிலாகா உறுதி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்தக் கடிதத்தின்படி பெர்சாத்து கட்சியின் கிளைகள், தொகுதிகள் மற்றும் மத்திய செயலவைக் கூட்டங்களின் கூட்டக் குறிப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டுமென சங்கப் பதிவிலாகா உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது கூட்டணிக்கான பதிவை பக்காத்தான் ஹரப்பான் சங்கப் பதிவிலாகாவிடம் சமர்ப்பித்தது.