பாரிஸ் – இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் டிரெபெஸ் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதம் சம்பவம் ஒன்றில், பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி ஒரு சிலரைப் பிணையாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிக்காரன் பிரெஞ்சு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
துப்பாக்கிக்காரனுக்கும், காவல் துறையினருக்கும் இடையில் சுமார் 4 மணி நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தபோது மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல்காரன் 26 வயது ரிடுவான் லக்டின் என அடையாளம் காணப்பட்டிருக்கிறான். ஏற்கனவே அவன் போதைப் பொருள் உள்ளிட்ட பல சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.
பல் பொருள் அங்காடிக்குள் ரிடுவான் லக்டிம் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தியபோது, அந்தத் தாக்குதலில் 2 பேர் மரணமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில் அருகாமையில் உள்ள கார்காசொன்னே என்ற இடத்தில் மற்றொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.