Home இந்தியா நெருக்கடியில் ஐபிஎல் போட்டி: மைதானத்திற்குள் பாம்புகள் விடப்போவதாக மிரட்டல்!

நெருக்கடியில் ஐபிஎல் போட்டி: மைதானத்திற்குள் பாம்புகள் விடப்போவதாக மிரட்டல்!

866
0
SHARE
Ad

சென்னை – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

காவிரி போராட்டத்தை உலகெங்கிலும் தெரியப்படுத்த இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் உட்பட காவிரி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

மலைவாழ் மக்கள் மலைகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய விஷமுள்ள நாக பாம்புகளை கிரிக்கெட் மைதானத்திற்கு விடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

“மலையில் இருக்கும் நல்ல நாகப்பாம்புகளை மைதானத்திற்குள் கொண்டு வந்து விடப்போறாங்க. அந்த பாம்புகளைப் பிடிக்க விளையாட்டு வீரர்களும், தமிழக காவல்துறையினரும் ஐபிஎல் விளையாடப் போறாங்க. நாங்க வேடிக்கை பார்க்கப் போறோம்” என்று வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்பவர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. செல்போன், கார் சாவி, கேமரா உள்ளிட்ட எந்த ஒரு மின்னணு சாதனமும் எடுத்து வரக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்திருக்கிறது.