Home நாடு பொதுத்தேர்தலை முன்னிட்டு மே 9-ம் தேதி பள்ளிகளுக்கு பொதுவிடுமுறை!

பொதுத்தேர்தலை முன்னிட்டு மே 9-ம் தேதி பள்ளிகளுக்கு பொதுவிடுமுறை!

907
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறுவதால், அன்றைய தினம் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

“14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 6,941 பள்ளிகள் உட்பட நாடெங்கிலும் உள்ள 10,180 அரசாங்கப் பள்ளிகள் மே 9-ம் தேதி மூடப்படும்” என மாட்சிர் காலிட் தெரிவித்தார்.

14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice