Home நாடு மே 9-ம் தேதி பொதுத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மே 9-ம் தேதி பொதுத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

944
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதேவேளையில், வரும் ஏப்ரல் 28-ம் தேதி, 222 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 587 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.

இதனிடையே, இராணுவம், காவல்துறையினர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களுக்கான வாக்களிப்பு மே 5-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.