கோலாலம்பூர் – துன் டாயிம் சைனுடின் தலைமையில் அமைக்கப்பட்ட மூத்தவர்களின் குழு, 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபு தாலிப் ஒத்மான் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.
1எம்டிபி விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே அரசாங்கம் மற்றும் அதன் இலாகாக்கள் மீதான நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்திருக்கும் மூத்தவர்கள் மன்றம், இதன் காரணமாகவே, 1எம்டிபி குறித்து விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.
மேலும் நால்வர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். நிக் ஷாரிசால் சுலைமான், சைட் நாகிஸ் ஷாஹாபுடின் சைட் அப்துல் ஜப்பார், இந்தோனிசிய நிதி சேவைகளுக்கான ஆலோசகர் ஃபாரிஸ் ரபிடின், ஊழலுக்கு எதிராகப் போரிடும் அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றின் நிறுவனத் தலைவரான சிந்தியா கேப்ரியல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்.