Home உலகம் கொலம்பியா 1 – செனிகல் 0 – இரண்டாவது சுற்றுக்குச் செல்கிறது கொலம்பியா

கொலம்பியா 1 – செனிகல் 0 – இரண்டாவது சுற்றுக்குச் செல்கிறது கொலம்பியா

1069
0
SHARE
Ad
செனிகலுக்கு எதிரான ஆட்டத்தில் பாதியில் காயம் காரணமாக வெளியேறிய கொலம்பியாவின் ரோட்ரிகுவெஸ்

மாஸ்கோ –  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘எச்’ பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை இரவு 10.00  மணிக்கு இந்த ஆட்டங்கள் நடைபெற்றன.

ஓர் ஆட்டத்தில் கொலம்பியாவும் செனிகலும் மோதின. முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் 0-0 என சமநிலையில் இருந்தன.

#TamilSchoolmychoice

எனினும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 74-வது நிமிடத்தில் யெர்ரி மினா ஒரு கோல் அடிக்க கொலம்பியா 1-0 கோல் எண்ணிக்கையில் செனிகலை வென்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கொலம்பியாவும், ஜப்பானும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகின்றன. ‘எச்’ பிரிவிலிருந்து செனிகலும், போலந்தும் ஆட்டங்களை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றன.