Home உலகம் போலந்து 1 – ஜப்பான் 0 – இரண்டாவது சுற்றுக்கு ஜப்பான் தகுதி

போலந்து 1 – ஜப்பான் 0 – இரண்டாவது சுற்றுக்கு ஜப்பான் தகுதி

1069
0
SHARE
Ad

மாஸ்கோ –  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘எச்’ பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை இரவு 10.00  மணிக்கு இந்த ஆட்டங்கள் நடைபெற்றன.

ஓர் ஆட்டத்தில் ஜப்பானும் போலந்தும் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும் வரை இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலை வகித்தன.

#TamilSchoolmychoice

எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னர் 59-வது நிமிடத்தில் பெட்நாரெக் அடித்த கோலால் போலந்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தற்போது முன்னணி வகித்து வருகிறது.

முழு ஆட்டம் முடிவடைந்த நிலையில் இதே கோல் எண்ணிக்கை நீடித்ததால், போலந்து ஜப்பானை 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.

எனினும், புள்ளிகள் அடிப்படையில் ஜப்பான் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.