மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘ஜி’ பிரிவிலிருந்து அடுத்த இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகும் குழுக்களை நிர்ணயிக்க நேற்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
ஓர் ஆட்டத்தில் பனாமாவும் துனிசியாவும் விளையாடின. மற்றோர் ஆட்டத்தில் இங்கிலாந்து – பெல்ஜியம் ஆகிய நாடுகள் மோதின.
பனாமா – துனிசியாவுக்கு இடையிலான ஆட்டத்தில் துனிசியா 2-1 கோல் எண்ணிக்கையில் உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
எனினும் இந்த இரு குழுக்களுமே இரண்டாவது சுற்றுக்குச் செல்ல தகுதி பெறவில்லை. பனாமா இதுவரை எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.