Home உலகம் பெல்ஜியம் 1 – இங்கிலாந்து 0 : இரு நாடுகளும் 2-வது சுற்றுக்குச் செல்கின்றன

பெல்ஜியம் 1 – இங்கிலாந்து 0 : இரு நாடுகளும் 2-வது சுற்றுக்குச் செல்கின்றன

1272
0
SHARE
Ad

மாஸ்கோ –  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘ஜி’ பிரிவிலிருந்து அடுத்த இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகும் குழுக்களை நிர்ணயிக்க நேற்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

ஓர் ஆட்டத்தில் பனாமாவும் துனிசியாவும் விளையாடின. இதில் துனிசியா 2-1 கோல் எண்ணிக்கையில் பனாமாவைத் தோற்கடித்தாலும், இரண்டு நாடுகளுமே இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் தகுதியைப் பெறவில்லை.

மற்றோர் ஆட்டத்தில் இங்கிலாந்து – பெல்ஜியம் ஆகிய நாடுகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது.

#TamilSchoolmychoice

பெல்ஜியத்தின் ஜானுசாஜ் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் தனது குழுவுக்கான ஒரே கோலைப் புகுத்தினார்.

இங்கிலாந்து தோல்வியடைந்தாலும், புள்ளிகள் அடிப்படையில், பெல்ஜியம், இங்கிலாந்து இரு நாடுகளுமே 2-வது சுற்றுக்குச் செல்கின்றன.

‘ஜி’ பிரிவில் 9 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடம் வகிக்க, 6 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2-வது இடம் வகிக்கிறது.

‘ஜி’ பிரிவின் பனாமா, துனிசியா ஆகிய இரு நாடுகளும் உலகக் கிண்ண ஆட்டங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்புகின்றன.