Home கலை உலகம் மண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”

மண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”

853
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியக் கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”. இன்று சனிக்கிழமை (4 ஆகஸ்ட்) ஒலியேறும் நிகழ்ச்சியில் ‘மண்ணின் மைந்தன்’ மலேசியா குறும்பட போட்டியின் வெற்றியாளர்களான ஷாமினி, ரவி குமார், பால முருகன், கவிமனன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பு இடம்பெறும்.

அதே நேரத்தில், இளைஞர்களுக்கு குறும்படப் போட்டியின் முலம் நல்ல ஒரு தளத்தை உருவாக்கித் தரும் வகையில் இவர்களின் ஒத்துழைப்போடு புதிய திரைப்படம் தயாரிப்பதாக இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய கே.வி மோகன் சொல்லியிருக்கின்றார்.

மண்ணின் நட்சத்திரம் அறிவிப்பாளர் மோகன்

இவர்களின் சந்திப்போடு, பீட்போக்ஸ் (beatbox) புகழ் லில் ரோன், அவரின் கலையுலகப் பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளப் போகிறார். இவர்களின் கலகலப்பான இன்று பிற்பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை நேயர்கள் கேட்கலாம். சிறந்த 5 மலேசியப் பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

#TamilSchoolmychoice

பிரேமா கிருஷ்ணன் தயாரிப்பில், மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒலியேறும் இந்நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார் மோகன். மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ஒலியேறும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்” நிகழ்ச்சியில் இணைந்திருங்கள் – திளைத்திருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.