Home நாடு பகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்

பகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்

1109
0
SHARE
Ad
இந்து தர்ம மாமன்ற பொறுப்பாளர்கள் –

மெந்தகாப் – மலேசிய இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆதரவோடு கடந்த ஜூலை 13 மற்றும் 14 இல், புக்கிட் பெண்டேரா ரெசோர்ட் மெந்தகாப்பில் ஏற்பாடு செய்துள்ள பகாங் மாநில அளவிலான இந்துதர்ம ஆசிரியர் பயிற்சி முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் பகாங் மாநிலத்தில் இருக்கும் அனைத்து தமிழ்ப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சமய போதனை ஆசிரியர்களுமாக மொத்தம் 52 பேர் கலந்துகொண்டனர். மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர்  அ.இராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சோ.சுப்பிரமணி தர்ம சிகாமணி கை .குமரகுருபரன் ஆகியோர் மிகவும் தெளிவான முறையில் பயிற்சி முகாமுக்கானப் பாடங்களை கற்பித்தனர்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்திருக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் இந்துதர்ம பாடநூல்கள் 1 – 4, இந்துதர்ம பயிற்சி நூல்கள் 1 – 3, இந்துதர்ம பயிற்றி 1, ஆசிரியர் கையேடு, பாடத்திட்டம் மற்றும் பிரார்த்தனைக் கோவை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

#TamilSchoolmychoice

வழங்கப்பட்ட இந்துதர்ம பயிற்றிகள் வகுப்பு நடத்த நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது என்றும் பாட உள்ளடக்கங்கள் சிறுவர்களுக்குப் பொருந்தும் வண்ணம் சமயநெறியோடும் புதிய உத்திகளோடும் உள்ளன எனவும் பங்கேற்பாளர்களால் கருத்துரைக்கப்பட்டது. வகுப்புகளை நடத்த பங்கேற்பாளர்கள் வழங்கப்பட்ட பயிற்றிகளைப் பயன்படுத்தி, பின்னர் அதன் குறை நிறைகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும், வாராந்திர சமய வகுப்பு குறித்த அறிக்கைகளை மின்னஞ்சல் [edu.mhdm@gmail.com] மற்றும் புலனம் (WhatsApp) மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சிறப்புப் பிரமுகராக பகாங் மாநில சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு கலந்துகொண்டார். பகாங் மாநில தமிழ் மொழி உதவி இயக்குனர் திரு சரவணனும் இந்நிறைவு விழாவில் கலந்துச் சிறப்பித்தார்.