இந்தி, தெலுங்கு மொழிகளின் விஸ்வரூபம்-2 பதிப்புகளும் போதிய ஆதரவைப் பெறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபம்-2 படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட முடியாமல் படம் முடங்கிக் கிடந்த போதுதான், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கடந்த ஆண்டு கமலுக்குக் கிடைத்தது. அதன் மூலம் அவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருமானமும் கிடைத்தது. கமலுக்கு 15 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவர் விஸ்வரூபம்-2 படத்தை முடித்து திரையிட்டதாகவும் ஆரூடங்கள் கூறப்பட்டன.
“பியார் பிரேமா காதல்” என்ற அந்தப் படம்தான் கமலின் விஸ்வரூபம்-2 படத்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.
பியார் பிரேமா காதல் – படமும் விஸ்வரூபம் 2 படமும் ஒரே நாளில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகின. ஆரம்ப நாட்களில் இரண்டு படங்களில் விஸ்வரூபம் படத்திற்குத்தான் அதிகமாக காட்சிகள் திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டன. ஆனால் அடுத்த மூன்றே நாட்களில் விஸ்வரூபத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்க, இரசிகர்கள் கூட்டம் பியார் பிரேமா காதல் நோக்கி திரண்டனர்.
இதன் காரணமாக, பியார் பிரேமா காதல் படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, விஸ்வரூபம் படத்திற்கான காட்சிகள் குறைக்கப்பட்டன.
ஆனால் பியார் பிரேமா காதல் தொடர்ந்து இரசிகர்களின் ஆதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாகத் தொடர்கிறது.
ஆக, கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு ஜோடியும், நயன்தாராவும் இணைந்து, பிக் பாஸ் நாயகன் கமலின் விஸ்வரூபம் -2 படத்தை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறார்கள் என்பதுதான் காலத்தின் கோலம்!