Home இந்தியா திமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்

திமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்

1440
0
SHARE
Ad

சென்னை – திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் முதல் தலைவராகத் தொடர்ந்து பதவியில் இருந்து வந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. அவரைத் தொடர்ந்து இரண்டாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஸ்டாலின்.

திமுக பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வந்திருந்தாலும், அண்ணா தன்னை பொதுச் செயலாளர் என்றே அழைத்துக் கொண்டார். “எனது தலைவர் எப்போதும் பெரியார்தான். எனவே திமுகவுக்கு தலைவர் என்று யாரும் இருக்கமாட்டார்கள்” என்று கூறி பொதுச் செயலாளராகவே கட்சிக்குத் தலைமையேற்று செயலாற்றி வந்தார் அண்ணா.

#TamilSchoolmychoice

ஆனால் அவருக்குப் பின்னர் தலைவராக வந்த கருணாநிதி கால ஓட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக பேராசிரியர் க.அன்பழகன் நியமிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவி அதிகாரங்கள் இல்லாத, வெறும் அலங்காரப் பதவியாக மாறியது. இருந்தாலும் அன்பழகன் தொடர்ந்து பொதுச் செயலாளராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

திமுக தலைவராக ஸ்டாலினின் அதிகாரபூர்வ பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் தொடங்குகிறது.

இதற்கிடையில் திமுக பொருளாளராக துரைமுருகன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் துரைமுருகன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.