மகாதீர் பிரதமரான அடுத்த சில நாட்களிலேயே புருணையிலிருந்து உடனடியாகப் புறப்பட்டு வந்து அவரை உடனடியாகச் சந்தித்தவர் புருணை சுல்தான் ஆவார்.
மகாதீருடன் அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியும், வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவும், அரசாங்க அதிகாரிகளும் புருணை வந்தடைந்தனர்.
மகாதீருக்கு புருணை சுல்தான் இன்று மதிய விருந்தளித்து கௌரவித்தார். இருதரப்பு நல்லுறவுகள் குறித்து அவர்கள் விவாதிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புருணையில் உள்ள மலேசியர்களையும் தனது வருகையின்போது மகாதீர் சந்தித்து உரையாடுவார்.