Home உலகம் மகாதீர் புருணை சென்றடைந்தார்

மகாதீர் புருணை சென்றடைந்தார்

936
0
SHARE
Ad

பண்டார் ஸ்ரீ பகவான் – பிரதமர் துன் மகாதீர் இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இன்று புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவான் வந்தடைந்தார். பிரதமரான பின் மகாதீர் வருகை தரும் இரண்டாவது தென்கிழக்காசிய நாடு புருணையாகும். இதற்கு முன்னர் அவர் இந்தோனிசியாவுக்கு வருகை தந்திருந்தார்.

மகாதீர் பிரதமரான அடுத்த சில நாட்களிலேயே புருணையிலிருந்து உடனடியாகப் புறப்பட்டு வந்து அவரை உடனடியாகச் சந்தித்தவர் புருணை சுல்தான் ஆவார்.

மகாதீருடன் அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியும், வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவும், அரசாங்க அதிகாரிகளும் புருணை வந்தடைந்தனர்.

#TamilSchoolmychoice

மகாதீருக்கு புருணை சுல்தான் இன்று மதிய விருந்தளித்து கௌரவித்தார். இருதரப்பு நல்லுறவுகள் குறித்து அவர்கள் விவாதிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புருணையில் உள்ள மலேசியர்களையும் தனது வருகையின்போது மகாதீர் சந்தித்து உரையாடுவார்.