Home Video சிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு

சிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு

1461
0
SHARE
Ad

சென்னை – பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா எதிர்வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்துக்கு தணிக்கை வாரியத்தில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரையும் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வாய்ப்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்திற்கு குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைப்பதால் சீமராஜா படத்திற்கு அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வண்ணம் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது படம் வெளியாவதாலும், அப்போது தமிழ் நாட்டில் தொடர் விடுமுறை அமைவதாலும் முதல் சில நாட்களிலேயே படம் அதிகமான வசூலைப் பெற்றுச் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ என இரண்டு வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயனோடு இணைந்து வழங்கிய இயக்குநர் பொன்ராமின் மூன்றாவது படம் ‘சீமராஜா’ என்பது படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியிருப்பதற்கான மற்றொரு காரணம்.

இந்தப் படத்தின் புதிய முன்னோட்டம் (டிரெய்லர்) நேற்று சனிக்கிழமை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினரோடு சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி ஆகியோரோடு இசையமைப்பாளர் டி.இமானும் கலந்து கொண்டார்.

நேற்று வெளியிடப்பட்டதிலிருந்து ஒரே நாளில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சீமராஜா முன்னோட்டம் யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: