உலகின் பாதியளவில் கடன் அட்டை மோசடியில் ஈடுபடும் நபர்கள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை மையமாகக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 44 பேர் நேற்று ரோமானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இணையத்தின் வழியாக இவ்வாறு கடன் அட்டை மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்பொருட் சாதனங்கள், போலி கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.அர்ஜெண்டினா, கொலம்பியா, இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்டு இவ்வாறு கடன் அட்டை மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.