புத்ரா ஜெயா, மார்ச் 29- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்றும் நாடாளுமன்றம் எப்பொழுது கலைக்கப்படும் என்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இவ்வேளையில் தேசிய முன்னணி மாநில தலைவர்கள் தொடர்ந்து பிரதமரை சந்தித்து வருகின்றனர்.
பிரதமருடனான தேசிய முன்னணி மாநில தலைவர்கள் சந்திப்பின் போது அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் துங்கு அட்னான் மன்சூர் உடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மதியம் 12.30 மணியளவில் பினாங்கு மாநில தொடர்பு குழுத் தலைவர் டத்தோ ஜைனல் அபிடின் இஸ்மாயில், பெர்லிஸ் மாநில அம்னோ துணைத்தலைவர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் பிரதமரை சந்தித்ததாகவும், காலையில் சரவாக் மாநில முதல்வர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாமூட்டும் பிரதமரை சந்தித்தாகவும் பிரதமர் இலாகா வட்டாரங்கள் தெரிவித்ததாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன.
நேற்று ஜோகூர், சபா, சிலாங்கூர், திரெங்கானு, பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தே.மு. வேட்பாளர்கள் பிரதமரை சந்தித்துள்ளனர்