மார்ச் 29 – பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது காலணியை வீசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சிந்து மாகாண ஐகோர்ட்டில் இன்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் ஆஜரானார்.
அப்போது அவரது ஜாமீன் காலத்தை 15 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நேரத்தில் இவர் மீது ஒருவர் காலணியை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த முஷாரப் பல எதிர்ப்புகளுக்கிடையே நாடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலிபான் தீவிரவாதிகள் முஷாரப் நாடு திரும்பினால் கொலை செய்து விடுவோம் என்று சூளுரைத்துள்ளனர்.