விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் என அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை அரங்கத்திலேயே, புதிய தலைமுறை குழுமத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
உண்மைகளை உடனுக்குடன் வெளியிட்டு தமிழக மக்கள் மத்தியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இளங்கோவன் போன்றவர்கள் இத்தகைய அபாண்டான பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.