Home Featured தொழில் நுட்பம் தமிழகத் தேர்தல்: அதி நவீன குறுஞ்செயலி தொழில்நுட்பத்தில் தமிழக செய்தித் தொலைக்காட்சிகள்!

தமிழகத் தேர்தல்: அதி நவீன குறுஞ்செயலி தொழில்நுட்பத்தில் தமிழக செய்தித் தொலைக்காட்சிகள்!

1218
0
SHARE
Ad

சென்னை – இந்த தமிழகத் தேர்தலில் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் சில தங்களின் நடுநிலையான அணுகுமுறையால் தமிழகப் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்கையும், கவன ஈர்ப்பையும் பெற்று வருகின்றன என ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.

குறிப்பாக, நான்கு தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களின் வித்தியாசமான செய்திகள், பேட்டிகள், விவாதங்களாலும் – அதைவிட முக்கியமாக நடுநிலையான அணுகுமுறையாலும், தற்போது தமிழகத்தில் தொலைக்காட்சி இரசிகர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Thanthi TV-logoPuthiya Thalaimurai TVதந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், போலிமர், ஆகியவையே அந்த நான்கு தொலைக்காட்சி அலைவரிசைகளாகும்.

#TamilSchoolmychoice

இந்த தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் அண்மையக் காலங்களில் அதிநவீன தொழில் நுட்பத்திலும் காலடி வைத்திருக்கின்றன.

இந்த அலைவரிசைகள் அனைத்தும், குறுஞ்செயலிகள் எனப்படும் எப்ஸ் (apps) மூலமாக கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய வசதிகளைக் கொண்டிருப்பதால், இனி இந்தத் தொலைக்காட்சி செய்திகளை நீங்கள் உங்களின் கைத்தொலைபேசிகளின் மூலமாகவே பார்த்துக் கொள்ளலாம்.

news-7- tamil-logoPolimer News TV-logo

 

தொலைக்காட்சி அலைவரிசைகள் என்றாலும், அவற்றைப் பார்க்க உங்களுக்கு தொலைக்காட்சி தேவையில்லை என்பதுதான் தொலைத் தொடர்புத் துறையின் இன்றைய நவீன வளர்ச்சியின் அடையாளமாகும்.

அதிலும், சில சமயங்களில் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போது, மழை, மோசமான வானிலை என்றால், அந்த சமயத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் தெளிவாகப் பார்க்க முடியாது – சில சமயங்களில் அறவே அந்த நிகழ்ச்சிகள் தெரியாது.

ஆனால், குறுஞ்செயலிகள் மூலம், கைத்தொலைபேசிகளில் பார்க்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. இடியோ, மழையோ, எவ்வளவு மோசமான வானிலையாக இருந்தாலும், இந்த செய்தித் தொலைக்காட்சிகள் குறுஞ்செயலி மூலம் மிகத் தெளிவாகத் தெரிகின்றன.

mobile-apps-எந்த நேரத்திலும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம், நாட்டின் – ஏன் உலகின் எந்த மூலைமுடுக்கிலும் இருந்து கொண்டு இந்த செய்தித் தொலைக்காட்சிகளை பார்த்து இரசிக்கலாம். இணையத் தொடர்பு வசதிகள் மட்டும் வேண்டும் – அவ்வளவுதான்!

அத்துடன், நீங்கள் இந்த குறுஞ்செயலியை உங்களின் கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து விட்டால், அதன் பின்னர்,  இந்தத் தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுஞ்செய்திகளாக அனுப்பும் முக்கியமான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். புஷ் மெசேஜ் – Push message – எனப்படும் இந்த நவீன தொழில்நுட்ப நடைமுறையைத்தான் செல்லியலும் பின்பற்றுகின்றது என்பது குறிப்பிடத்ததக்கது.

-இரா.முத்தரசன்

(செல்லியல் நிர்வாக ஆசிரியர்)