Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா பயப்பட வேண்டாம்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பழிவாங்க மாட்டோம் – கருணாநிதி!

ஜெயலலிதா பயப்பட வேண்டாம்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பழிவாங்க மாட்டோம் – கருணாநிதி!

617
0
SHARE
Ad

DMK karunanithiசேப்பாக்கம் – தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், யாரையும் பழிவாங்காத  நல்லாட்சிதான் நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசினார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மாலை 5 மணியளவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டியதில்லை. அவரை நான் பழிவாங்குவேனோ என்று அவர் பயப்பட வேண்டாம்.

பழிவாங்குவது என்னவென்பதை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்காததால், நான் பழிவாங்கமாட்டேன். ஏன் இதனை நான் சொல்கிறேன் என்றால், 2001-ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், நள்ளிரவில் என்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

என்னை அப்போது கொல்லவும் முயற்சி நடந்தது, என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நான் முதல்வரானால் நிச்சயம் யாரையும் பழிவாங்க மாட்டேன்.

திமுக செயல்படுத்திய நல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது பழிவாங்கும் செயலாக இருந்தால், இந்த கருணாநிதி அந்த வகையில் பழிவாங்குவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்றார்.