Home Featured தமிழ் நாடு விஜய் மல்லைய்யாவின் ஆடம்பர பங்களா பறிமுதல்!

விஜய் மல்லைய்யாவின் ஆடம்பர பங்களா பறிமுதல்!

684
0
SHARE
Ad

vijay mallayaகொச்சின் – விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக கோவாவில் உள்ள பங்களாவை வங்கிகள் பறிமுதல் செய்திருக்கின்றன. வடக்கு கோவா ஆட்சியர் நில மோகனன், வங்கிகள் இந்த வீட்டை பறிமுதல் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த வீட்டின் மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது எஸ்பிஐ கேப்ஸ் நிறுவனம் இந்த வீட்டை பறிமுதல் செய்துள்ளது. இந்த வீட்டில்தான் பெரும்பாலான கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

மும்மையில் உள்ள கிங்பிஷர் அலுவலகத்தை ஏலம் விட கடந்த மாதம் வங்கிகள் முயற்சி செய்தன. அடிப்படை விலையாக 150 கோடி ரூபாயை வங்கிகள் நிர்ணயம் செய்தன. ஆனால் அதை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

#TamilSchoolmychoice

அதேபோல கிங்பிஷர் பிராண்ட் மற்றும் அதுசார்ந்த டிரேட் மார்க்கையும் விற்க திட்டமிட்டது. 367 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்ட இதனையும் யாரும் வாங்க முன்வராத நிலையில், கோவாவில் உள்ள ஆடம்பர பங்களாவை வங்கிகள் கையகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது..