Home உலகம் ஜிபி நியூஸ் : பிரிட்டனில் புதிய தொலைக்காட்சி ஊடகம் தொடக்கம்

ஜிபி நியூஸ் : பிரிட்டனில் புதிய தொலைக்காட்சி ஊடகம் தொடக்கம்

759
0
SHARE
Ad
ஜிபி நியூஸ் – தொலைக்காட்சி ஊடகம் – (படம் : நன்றி தி ஹெரால்ட் இணைய ஊடகம்)

இலண்டன் : போட்டிகள் நிறைந்த தொலைக்காட்சி ஊடகத்துறையில் பிரிட்டனில் இருந்து மற்றொரு நிறுவனம் களத்தில் குதித்திருக்கிறது. ஜிபி நியூஸ் (GB News) என்ற புதிய தொலைக்காட்சி ஊடகம் ஜூன் 13 முதல் பிரிட்டனில் தனது சேவைகளைத் தொடக்கியிருக்கிறது.

ஏற்கனவே, அங்கு முன்னணியில் இருக்கும் பிபிசி, ஸ்கை நியூஸ் ஆகிய தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் போட்டியாக ஜிபி நியூஸ் திகழும்.

பிபிசி தொலைக்காட்சியில் பணியாற்றிய புகழ்பெற்ற தொலைக்காட்சி பத்திரிகையாளரான அண்ட்ரூ நீல்  ஜிபி நியூஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மக்களிடையே கருத்துகள் களங்களை உருவாக்கும் புதிய பாணியிலான செய்திகளை ஜிபி நியூஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.