Home உலகம் ஈரோ 2020 : செக் குடியரசு 2 – ஸ்காட்லாந்து 0

ஈரோ 2020 : செக் குடியரசு 2 – ஸ்காட்லாந்து 0

1044
0
SHARE
Ad

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) – ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 14) இரவு 9.00 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – செக் குடியரசு மோதின.

இந்தப் போட்டியில் செக் குடியரசு 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

செக் குடிரசு குழுவின் இரண்டாவது கோல் மிக வித்தியாசமான முறையில் அமைந்தது.

விளையாட்டு செக் குடியரசு தரப்பு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, ஸ்காட்லாந்து நாட்டின் கோல் கீப்பர் காலியான மைதானத்தில் நடுப்பகுதிக்கு வந்து விட்டார்.

அப்போது திடீரென பந்து செக் குடியரசு விளையாட்டாளர் வசம் வந்தது. அவரும் நேராக ஸ்காட்லாந்து கோல் கம்பத்தை நோக்கி அடிக்க, நடு மைதானத்தில் இருந்த கோல் கீப்பர் தனியாளாக பந்தை விரட்டிச் சென்றார். எனினும் அந்தப் பந்து நேராக கோல் வலைக்குள் புகுந்தது.

போலந்து – ஸ்லோவாகியா

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் போலந்து – ஸ்லோவாகியா (திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 ஜூன் 14) மோதுகின்றன.

இடையிலான ஆட்டம் இரண்டாவது ஆட்டமாக நள்ளிரவு12.00 மணிக்கு நடைபெறுகிறது.

ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஸ்பெயின் – சுவீடன்

மூன்றாவது ஆட்டமாக ஸ்பெயின் – சுவீடன் இடையிலான ஆட்டம் (செவ்வாய்க்கிழமை ஜூன் 15) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்பெயின் நாட்டின் செவில் (Seville) நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

1964, 2008, 2012 ஆண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய ஸ்பெயின் இன்று ஈரோ 2020-இல் முதன் முறையாக பங்கெடுக்கிறது.

மற்றைய ஆட்டங்களின் முடிவுகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

இங்கிலாந்து 1 – குரோஷியா 0

ஆஸ்திரியா 3 – நோர்த் மாசிடோனியா 1

நெதர்லாந்து 3 – உக்ரேன் 2