தீபக் நேற்று காவல் துறையில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மற்றும் தபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் புனித யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் ஆகிய இருவருக்கும் எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி தொடுத்த அல்தான்துயா தொடர்பிலான வழக்கில் தலையீடு செய்தார்கள் என்பதுதான் புகாரின் சாராம்சம்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், ஷாபி அப்துல்லாவை வழக்கறிஞராக நியமித்துக் கொள்ளும்படி தனக்கு நெருக்குதல்கள் வழங்கினார் என்றும் தீபக் தனது புகாரில் கூறியிருக்கிறார்.