Home நாடு பாஸ் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள்

பாஸ் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள்

1157
0
SHARE
Ad

கோல திரெங்கானு – இன்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் முக்தாமார் எனப்படும் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அண்மையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது குழுவினருடன் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங்கையும் மற்ற முன்னணி பாஸ் தலைவர்களையும் சந்தித்து இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கோலதிரெங்கானுவில் இன்று நடைபெற்ற பாஸ் கட்சியின் 64-வது ஆண்டு மாநாட்டில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியுடன் இணைந்து மஇகா தலைவர்களும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.எஸ்.இராஜகோபால், மஇகா நிர்வாகச் செயலாளர் டத்தோ முனியாண்டி, மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ டி.முருகையா ஆகியோர் இன்றைய பாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மஇகா தலைவர்களில் அடங்குவர்.

மாநாட்டின் இடைவேளையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசி தேவமணி “பங்சா மலேசியா எனப்படும் மலேசியர்கள் என்ற உணர்வு கொண்ட எந்தத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றவும், செல்வ வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும்,  அரசியல் ஒத்துழைப்பு வழங்கவும் மஇகா தயாராக இருக்கிறது” என தேவமணி கூறினார்.

வளம் மிக்க மலேசியாவை உருவாக்க பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தமது கட்சி தயாராக இருப்பதாக தேவமணி மேலும் கூறினார்.