Home நாடு பாஸ் – மஇகா தலைவர்கள் சந்திப்பு

பாஸ் – மஇகா தலைவர்கள் சந்திப்பு

1878
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா தலைவர்களின் குழுவினரும், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங் தலைமையிலான பாஸ் குழுவினரும் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இருதரப்பு ஒத்துழைப்பு, மத விவகாரங்கள், இடைத் தேர்தல்கள் மற்றும் அரசியல் உடன்பாடு ஆகிய அம்சங்கள் குறித்து இரு தரப்புகளும் விவாதித்ததாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விக்னேஸ்வரனுடன் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, மஇகா இளைஞர் பகுதித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாஸ் சார்பில் அதன் தலைவர் ஹாடி அவாங்குடன், துணைத் தலைவர் துவான் இப்ராகிம், பாஸ் ஆதரவு இந்தியர் மன்றத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice