கோலாலம்பூர் – மலேசிய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் ஆடம்பர உல்லாசப் படகான ‘இக்குனாமிட்டி’-யை விற்பனை செய்ய கோலாலம்பூர் கடல்சார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்த விற்பனைக்காக அனைத்துலக மதிப்பீட்டாளர் ஒருவரையும், மத்திய இடைத் தரகர் ஒருவரையும் நியமிக்க அரசாங்கம் செய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.
இன்றைய நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இக்குனாமிட்டி ஆடம்பர உல்லாசப் படகை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்கும் அந்தப் படகு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.