வாஷிங்டன் – அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் செனட் மன்றம் உறுப்பினர்களுக்கான தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. நடைபெற்ற தேர்தல் முடிவுகளோடு சேர்த்து, மொத்தம் 184 தொகுதிகளை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. 170 தொகுதிகளில் மட்டுமே டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் மன்றத்தில் இதுவரை குடியரசுக் கட்சி 50 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 43 தொகுதிகளில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற அமெரிக்கத் தேர்தல்களில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என்ற நிலையில், அமெரிக்க செனட் அவையின் பெரும்பான்மையைக் குடியரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.