கோலாலம்பூர்: சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பட்டக் கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமது காசிமிற்கு சுவாசிப்பதற்கு இனி உயிர்காக்கும் கருவியின் துணை தேவையில்லை என மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் ஜெனரல் முகமது ஹம்டன் வாஹித் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
முகாமட் அடிப் மற்றும் பூச்சோங்கில் ஆற்றில் மூழ்கி இறந்த ஆறு தீயணைப்பு வீரர்களுக்கும் நன்கொடை திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காற்பந்து போட்டியில் நிருபர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும், அடிப்பின் நுரையீரல் பிரச்சனைக் காரணமாக அவர் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்கப்படுவார் என்றார் அவர்.
கோயில் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவித்த முகமது ஹம்டன், கலக இடத்திலிருந்த எட்டு தீயணைப்பு வீரர்களிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.