Home நாடு பேரங்காடியில் அமைக்கப்பட்ட நூலகம்

பேரங்காடியில் அமைக்கப்பட்ட நூலகம்

786
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: பெரும்பாலான நாட்களில் முக்கியமாக விடுமுறை நாட்களில் பல குடும்பங்கள் பேரங்காடிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் பொது நூலகக் கழகம்  (Selangor Public Library Corporation) ஜெயா ஓன் (Jaya One) பேரங்காடியில் தனது முதல் நூலகத்தை திறந்துள்ளது.

இந்நூலகம் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் குழுவின் இயக்குனருமான, ரிஷி ரிஷ்யாகரன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய ரிஷி, மேலும் இம்மாதிரியான பொது நூலகங்கள் எல்லா பேரங்காடிகளிலும், எம்ஆர்டி நிலையங்களிலும் உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திறக்கப்பட்ட இந்நூலகத்திற்கு தற்போது 5,000 பேர் வரையிலும் பயனடைந்துள்ளனர். இலவச இணையம், கருத்தரங்கு மற்றும் படிக்கும் அறை, கணினிகள் என வருகையாளர்களுக்கு இந்நூலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   

ஜெயா ஓன் சென்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் தொடர்புத் துறை தலைவர் எல்லிஸ் டே, பெற்றோர்கள் இம்மாதிரியான நூலகத்தை பெரிதும் வரவேற்கிறார்கள் எனக் கூறினார். இந்நூலகம் 100–P2.003, The School, Block J, Jaya One, No 72A, Jalan Universiti, Section 13, Petaling Jaya எனும் முகவரியில் இயங்கி வருகிறது. பொது விடுமுறையைத் தவிர்த்து தினமும் காலை மணி 10 முதல் இரவு 7 மணி வரை இந்நூலகம் திறக்கப்பட்டிருக்கும்.