Home நாடு இனவாதத்திற்கு சிலாங்கூரில் இடமில்லை!

இனவாதத்திற்கு சிலாங்கூரில் இடமில்லை!

914
0
SHARE
Ad

கிள்ளான்: சிலாங்கூரில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அமைதியானச் சூழலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த முயற்சியையும் சிலாங்கூர் அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூரில் அனைத்து இன மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.

சீ பீல்ட் கோயிலின் இடமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தைத் தொட்டுப் பேசிய அவர், இனவாதத்திற்கு இம்மாநிலத்தில் இடமில்லை என நேற்று சுல்தான் ஷாராபூடின் ஷாவின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தெரிவித்தார் .